வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு
வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 63 வீத வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட
தேர்தல் கட்டுப்பாட்டறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
109705 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 6481 பேர் வாக்களித்துள்ளனர்.
இதே வேளை வன்னி தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமும் முல்லைத்தீவில் 70.8 வீதமும்
வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் வந்தடைந்தன
வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்
நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் வந்தடைந்துள்ளது.
இன்று 4 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவுகளின் அடிப்படையில் 69481 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அது 63
வீதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை மாலை 4 மணிக்கு தபால் மூல வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டதுடன் ஏனைய வாக்குகள் இரவு 7 மணியில் இருந்து
எண்ண ஆரம்பிக்கப்பட்டன.