வவுனியாவை தலைமையாக கொண்டு இயங்கி வரும் தினப்புயல் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்
கடந்த 4வருட காலமாக வன்னிமண்னில் தேசியம் சுயநிர்ணையம் தொடர்பில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் இப்பத்திரிகை மீது மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அதன் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரிகை கடைகளுக்கு சென்ற புலனாய்வாளர்கள் அவர்கள் பத்திரிகை விற்பனை செய்துகொண்டிருந்த போது இப்பத்திரிகை தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக பத்திரிகை விற்பனை முகவர்கள் தினப்புயல் விற்பனை விரிவாக்கள் ஊழியர்கள் இடம் முறைப்பாடு செய்துள்ளனர் .கூட்டாச்சி என்று கூறிக்கொள்ளும் அரசாங்கம் இவ்வாறு தினப்புயல் பத்திரிகை மீது தனது அடக்கு முறைகளை கட்டவித்து விட்டுள்ளமையானது ஜெனனாயகத்தை மீறும் ஒரு செயல்பாடாகவே இதனை கான முடிகிறது கடந்தவார பத்திரிகையில் பிரபாகரனின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே நாடுகடற்த தமிழீழத் அரசாங்கத்திற்கான அங்கீகாரம் என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.