வவுனியா உள்ளூராட்சி மன்றத்தில் இன்று ( 23.09.2015 ) காலை 10 மணி அளவில் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வீட்டு கூரை தகடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு. G.T லிங்கநாதன், திரு இந்திரராஜா, திரு தியாகராஜா, திரு தர்மபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஆரம்ப உரையினை திரு. தர்மபாலா அவர்கள் ஆற்றினார்.
மேலும் இந்த நிதிகள் யாவும் வடமாகாண சபையினால் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் முறையே 40 இலட்சம் 60 இலட்சம் வரையிலான நிதிகள் ஒதுக்கப்பட்டதாக திரு.தியாகராஜா தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் திரு.தியாகராஜா அவர்கள் கூறுகையில் 2014ம் ஆண்டு தனது சொந்த நிதியில் 13550000 ரூபாவும், உள்ளூராட்சி சபைக்கு 90000 ரூபாவும், கால்நடை பிரிவிற்கு 245000 ரூபாவும் கல்வித்துறைக்கு 50000 ரூபாவும், விளையாட்டுத்துறைக்கு 785000 ரூபாவும் கிராம அபிவிருத்திக்கு 135000 ருபாவும்’ வழங்கப்பட்டதாக வும் 2015ம் ஆண்டு நிதி விபரத்தையும் குறிப்பிட்டார்.
அந்தவகையில் உள்ளுராட்சி மன்றத்திற்கு 455000 ரூபாவும் கலாசார பிரிவிற்கு 200000 ருபாவும் கல்வி பிரிவிற்கு 1575000 ரூபாவும் விளையாட்டுத்துறைக்கு 210000 ரூபாவும் கிராம அபிவிருத்திற்கு 920000 ரூபாவும் கால்நடை பிரிவிற்கு 1690000 ரூபாவும் சமுக சேவை பிரிவிற்கு 50000 ரூபாவும் சிறுவர் நன்நடைத்தைப்பிரிவிற்கு 10000 ருபாவும் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிதியுதவியானது மொத்தமாக 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. படங்களும் தகவலும் :- ம.மனோ