1990 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அகதிமுகாம்களிலும், இந்தியவிற்கும் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் அதன் பின் வவுனியாவில் பல கிராமங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டார்கள்.
அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் வவுனியா எல்லப்பர் மருதங்குளம், ஆனந்தபுரம் கிராமத்தில் 44 குடும்பங்களை சேர்ந்த மக்களும் உள் அடங்குகின்றனர். இக்கிராம மக்கள் 1996 ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மண் குடிசைகளிலும் தகர கொட்டில்களிலும் வாழ்க்கை நடத்தும் அம்மக்கள் கூடுதலாக கூலிதொழில் செய்பவர்களாகவே காணப்படுகிறார்கள். அத்துடன் மழைகாலங்களில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் இடம் பெயர்ந்து செல்வதாக தெரிவிக்கும் இக்கிராம மக்கள் தாங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மழை காலங்களில் முற்றாக பாதிக்கப்படும் வீடுகளுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் மக்கள் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படுமிடத்து மழை காலங்களின் இடம் பெயர்விலிருந்து விடுதலை கிடைக்கும் என குறிப்பிட்டனர்.
மக்கள் வீட்டுத்திட்டம் கோரி போராட்டங்களை நடத்திய போதும் அதிகாரிகள் மேலிடத்திற்கு அறிவிக்கிறோம்,தெரிவிக்கிறோம் போன்ற வாக்குறுதிகளை வழங்கி தட்டி கழிப்பதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
படங்களும் தகவலும்:- சுகந்தன்.