வவுனியா ஓமந்தை சோதனைசாவடி முகாமையும், வவுனியா குடியிருப்பு நகர முகமையும் அகற்றக்கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!
வவுனியா குடியிருப்பு நகர இராணுவ முகாமையும், ஓமந்தை சோதனைச்சாவடி இராணுவ முகாமையும் அகற்றக்கோரி இன்று 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் அம் முகாம்களின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று காலை 9.30 குடியிருப்பு முகாமிற்கு முன்னால் வாயை கறுப்புத்துணியால் கட்டி பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த முகாமில் உள்ள இராணுவத்தை வெளியேறுமாடு கோசமிட்டு தமது எதிர்பை தெரிவித்தனர். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் இவ்முகாமில் இருப்பதுடன்; இங்கே பொது நோக்கு மண்டபம், சிறுவர் பூங்கா மற்றும் அருகில் பாடசாலையும் உள்ளநிலையில் இவ் இராணுவமுகாம் அகற்றப்படவேண்டும் எனவும் ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர்
இதனையடுத்து காலை 11.00 மணிக்கு ஓமந்தை சோதனைசாவடி இராணுவமுகாம் முன் பேரணியாக சென்ற வடக்கு இளைஞர்கள் ‘எமது வீடே எமக்கு வேண்டும் முகாமல்ல’, இராணுவமே நீங்கள் வியாபாரிகளா? பாதுகாப்பு படையினரா?’, அதிகாரமுடையது இராணுவமா? அரசாங்கமா?’, மைத்திரி ரணில் அரசே எம் நிலங்களுக்கு பதில் என்ன? போன்ற பதாதைகளுடன் கோசமிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.
தனியார் காணியில் இராணுவ சோதனை நடவடிக்கைக்காக 20 வருடங்களுக்கு மேலாக அமைக்கப்ட்டுள்ள இந்த இராணுவமுகாமை அகற்றுமாறு கோரியும் ஓர் நியாயமானதும் நீதியுமானதுமான விசாரணைகள் மூலம் இராணுவம் கையகப்படுத்திய நிலங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்த இதே வேளை திடீரென ஏ 9 வீதியினை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக வாகனபோக்குவரத்துகளும் சிறிது நேரம் தடைப்பட்டதுடன் உடனே அங்கிருந்த பொலிசார் ஆர்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.