வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதரிகரிப்பு

202

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதரிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு கனகராயன்குளம் மன்னகுளம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

தற்போது காட்டுயானைகள் ஊர் மனைக்குள் புகுந்து பெரும் பயிரழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இரவு வேளைகளில் ஓர் அச்சநிலை காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், மாலை வேளைகளில் அயல் கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் கூட ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

 

SHARE