வவுனியா கனகராயன்குளம் பாடசாலைக்கு இன்று இந்திய துணைத் தூதர் ஆ. நடராஜன் விஜயம்

251

 

வவுனியா கனகராயன்குளம் பாடசாலைக்கு இன்று 11-11-2016 இந்திய துணைத் தூதர் ஆ. நடராஜன் விஜியம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தை பார்வையிடும் நோக்கில் பாடசாலை அதிபர் திருமதி.ரேவதி கிருஸ்ணமூர்த்தியின் அழைப்பின் பேரில் வருகை நந்திருந்த இந்திய துணைத்தூதர் பாடசாலை சமூகத்தினரால் மாலை அணிவித்து வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு ஆராத்தி செய்யப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் வழிபட்ட இந்திய துணைத்தூதர் ஞாபகர்த்தமாக பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
பாடசாலை மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்த வரவேற்பு நடனத்தை பாடசாலை மாணவர்கள் வழங்கினர். பாடசாலை உப அதிபரால் இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் அவர்களை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தப்பட்டதுடன் நினைவுப்பரிசில் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் ஒரு தொகுதி புத்தகங்கள் இந்திய துணைத்தூதுவரால் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் உரை நிகழ்த்திய இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன்
பாடசாலை மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது என குறிப்பிட்டார்.
பாடசாலைக்கு வந்தததினால் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை கேட்டு அறிந்துகொண்டள்ளேன் ஆகவே முடிந்தவரையில் இந்திய அரசாங்கம் உதவிகளை மேற்கொள்ளும். தமிழர்களுடைய பண்பாட்டை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது குறிப்பாக அவர்களின் விருந்தோம்பல் சிறப்பானதாக இருக்கிறது. இங்கு கல்லூரியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படத்தை பார்க்கும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. அப்துல் கலாமும் அதிகமாக மாணவர்களுடன் தான் நேரத்தை செலவிடுவார் என சுட்டிக்காட்டினார்.
இங்குள்ள மாணவர்கள் அவரைப்போன்று இலங்கை ஜனாதிபதியாகக் கூட வரமுடியும் என குறிப்பிட்டார். தமிழ் மொழி எமது தாய் மொழியாக இருந்தபோதும்  இன்று ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அதிகமாக தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
கல்வித்துறை மாத்திரமல்ல விழையாட்டுத்துறை மற்றும் இசைத்துறை தொழில்நுட்பம் போன்றவற்றையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அத்துடன் இசைக்கருவிகள் இந்தியவினால் இந்த பாடசாலைக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed-8 unnamed-10 unnamed
SHARE