வவுனியா கற்பகபுரம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

326

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா கற்பகபுர மக்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கற்பகபுர மக்கள் கொலையாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், எமது பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும், வழக்கறிஞ்ஞர்கள் கொலையாளிக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞ்ஞர் நால்வரை ரயரை கொழுத்தி வீதித்தடை ஏற்படுத்தியதாக பொலிசார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE