01.பொருளாதார மத்திய நிலையம் வவுனியா பிரதேசத்தில் அமையவேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?
1. ஆரம்பம் தொடர்பான விடயங்கள்.
2. இவ்விவகாரம் தோல்வியில் முடிவடைந்தது ஏன்?
02.வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பத்தில் தாண்டிக்குளம், புளியங்குளம் என்ற இரு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டதில் அமைச்சர் றிசாட் அவர்களது தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனது உண்மைத்தன்மை என்ன?
1.இதற்காக அமைச்சர் சத்தியலிங்கம் பலகோடி ரூபாய்கள் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவ்விடயம் குறித்த உண்மைத்தன்மை
03.இந்த பொருளாதார மத்திய நிலையம் ஏன் அரசியல் மயமாக்கப்பட்டது?
1. யாழ் அரசியல் தலைமைகளின் தலையீடு எதற்காக?
2. தென்னிலங்கை அரசியல்வாதிகளின் தலையீடு எதற்காக?
4.வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னணியில் உங்களது கட்சித் தலைமையும், பாராளுமன்ற உறுப்பினராகிய உங்களது பின்னணியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனது உண்மைத்தன்மை.
1.இதற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் தொடர்புகள் இருக்கிறதா?
05.வவுனியா ஓமந்தையின் உண்ணாவிரதம் உங்களால் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்றே கட்சித் தலைமைகளினாலும் பொதுமக்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?
1.வன்னி பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் முடிவெடுக்க முடியாமல் போனது ஏன்?
06. கட்சியிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் தாண்டிக்குளத்தில்தான் அமையவேண்டும் என்று வவுனியா நகரத்தில் இருக்கக்கூடிய பொதுமக்களுடன் இணைந்து உங்களுக்கு எதிராக அடையாள உண்ணாவிரதம் இருந்ததற்கான பின்னணிக் காரணம் என்ன?
07. உண்ணாவிரதமிருந்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியதன் விளைவு இறுதியில் ஓமந்தையிலும், தாண்டிக்குளத்திலும் இப்பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவில்லை. இது முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கைமாறியுள்ளது. இதற்கு உங்களது பதில் என்ன?
08. ஒட்டுமொத்த வர்த்தகர்கள், விவசாயிகளது கருத்துக்களை உள்வாங்கிக்கொண்ட பின்னரா நீங்கள் ஆர்;ப்பாட்டங்களில் கலந்துகொண்டீர்கள்?
09. பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் தற்போது மௌனம் காக்கப்படுகிறதே. இதற்கான காரணம் என்ன?
10. ஓமந்தையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அமைச்சர் சத்தியலிங்கமும் நீங்களும் இரகசியமான முடிவுகளை மேற்கொண்டு இறுதியில் ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்போம் என்று முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனது உண்மைத்தன்மை.
11. மக்களுக்கான அபிவிருத்தி அரசியல்வாதிகளின் தலையீட்டினால் கைநழுவிப்போனது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?
12.பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக ஒருமித்த தீர்மானங்களை மேற்கொள்ள இயலாத நீங்கள், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்களில் எவ்வாறு ஒருமித்துச் செயற்படப்போகின்றீர்கள்? இவ்விடயம் தமிழ் மக்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. இதுகுறித்த உங்களது பதில்?
12. தற்போது இந்த பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் உங்களது தனிப்பட்ட கருத்து என்ன?
13.முஸ்லீங்கழுக்கும் சிங்களவர்களுக்கும் இந்த பொருளாதார மத்திய மையம் கைமாறிப்பேனது அரசியல் வாதிகளாகிய உங்களுக்கு இப்போ சந்தோசமா?
வவுனியா கிராமிய பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அரசியல் வாதிகளிடம் ஒரு சில கேள்விகள் உங்கள் பதில்கள் அப்படியே பிரசுரிக்கப்படும் வக்களத்து வாங்காது உங்கள் பதில்கள் thinappuyal2014@gmail இதற்கு அனப்பிவைக்கவும்







