வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இன்றிலிருந்து (21-08-2016) வெளியேறியுள்ளனர்.
அண்மையில் வடக்குக்கான இளைஞர் அமைப்பு என்ற அமைப்பினர் இவ் இராணுவ முகாமுக்கு முன்பாக மக்களின் காணிகளிலிருந்து வெளியேறு என ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இன்றிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் உத்தியோகபூர்வமாக இக் கட்டத்தினை மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

