வவுனியாவில் எட்டு மாத குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பொலிசாரின் கபட நாடகம்….

233

வவுனியாவில் எட்டு மாத குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பொலிசாரின் கபட நாடகம் என்றும் இனி செய்திகள் வெளிவரும் கவனம் உண்மையில் இது குறித்து மிக பொறுப்புடன் பொலிசார் நடந்து கொண்டதால் குழந்தை காப்பாற்றப்பட்டது உண்மையில் பாரட்டப்படத்தக்கது .

வவுனியா  குட்செட்வீதியில்  கடத்தப்பட்ட  குழந்தை  பொலிசாரின்  தீவிர நடவடிக்கையால்  புதுக்குடியிருப்பில் மீட்பு.

வவுனியா  குட்செட்வீதியில்  கடத்தப்பட்ட  குழந்தை  பொலிசாரின்  தீவிர நடவடிக்கையால்  புதுக்குடியிருப்பில் மீட்பு.

பொலிசாரின்  உதவிக்கு  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா குட்செட் வீதியில் 1 ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கடத்தியவர்களை கைது செய்துள்ளதுடன் குழந்தையும் மீட்டெடுத்துள்ளனர்.

தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு நோக்கி சென்றுள்ளனர்.

குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரன்பாடுகள் இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறு இருப்பினும் 8மாதக்குழந்தையை கடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர்கள் .

 

SHARE