வவுனியா – குருமன்காடு சந்தியிலுள்ள ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட சிலரின் தங்க நகைகள் திருட்டு

228

வவுனியா – குருமன்காடு சந்தியிலுள்ள ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றுள்ள நிலையில் இதில் கலந்து கொண்ட சிலரின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்த்திருவிழா இடம்பெற்ற நேரத்தில் அங்கு வந்த திருடர்கள் ஐந்து பேரிடம் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தமது நகைகளை பறிகொடுத்த ஐவரும் சம்பவம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவத்தில் நான்கு பவுண் தங்க நகையை பறிகொடுத்த பெண்மணியொருவர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், மொத்தமாக 12 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE