புறக்கோட்டை பெஸ்டியன் வீதி, தனியார் பஸ் நிலையத்தில் அண்மையில் பயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட கார்த்திகாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்ட்டுள்ளார்.
மன்னார் கோவிற்குளம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தேடி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர், சடலத்தை பயணப் பொதியில் இட்டு தூக்கிச்செல்லும் காட்சிகள் சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
34 வயதான வட்டுக்கோட்டையைச் சோந்த கார்த்திகா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.
தொடர்புடைய செய்தி- கார்த்திகாவின் காதலனை தேடும் குற்றத் தடுப்பு பொலிஸார்!