வவுனியா சிதம்பரபுரம் அகதிமுகாம் மக்களுக்கு தற்காலிக கொட்டகைகள் அமைக்க நிதியுதவி
கடந்த 25 வருடங்களாக சிதம்பரபுரம் அகதிமுகாமில் வசித்துவரும் மக்களுக்கு தற்காலிக கொட்டகைகள் அமைக்க வடமாகாண மீள்குடியேற்ற அமைச்சர் பா.சத்தியலிங்கம் இன்று மாலை 4.00 மணிக்கு 61.000 ரூபா நிதியுதவி வழங்கினார்.
சிதம்பரபுரம் அகதிமுகாம் மக்களுக்கு ஏற்கனவே காணிகள் பிரித்து வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு காணிகளை துப்பரவு செய்ய 16000 ரூபா வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில் துப்பரவு செய்யப்பட்டுள்ள காணிகளை பார்வையிட்ட சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்கு அவரின் அமைச்சினூடாக பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கி வைத்தார்.