வவுனியா சுகாதாரப் பணிமனை வளாகத்தின் இன்றைய நிலை என்ன? உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு.

324

 
வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வடமாகாணத்தின் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) டெங்கு தொடர்பாக வீடுகள், கடைகள், சந்தை, வியாபாரஸ்தலங்கள், சுப்பர் மார்க்கட் போன்ற பகுதிகளில் அதற்கு முன்பாக இருக்கக் கூடிய நீர்வடிகால்கள் அசுத்தமாகக் காணப்படுகின்றது. நுளப்பு உருவாகுவதற்கான காரணிகளும் உள்ளது. சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று தமது கடமைகளைச் செய்து வருகின்ற போதிலும் தமது பகுதியில் உள்ளவற்றைத் துப்பரவு செய்யாது ‘ஊருக்கு உபதேசம் உனக்கென்ன’ என்ற பழமொழிக்கு அமைய நடந்துகொள்வது மக்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

IMG_20151217_124930 IMG_20151217_124933 IMG_20151217_124940 IMG_20151217_125000 IMG_20151217_125003 IMG_20151217_125102 IMG_20151217_125104
பணம் கொடுத்து ஒரு சில சுகாதார முறையற்ற கடை வவுனியா மாவட்டத்தில் இயங்கி வருவதாகவும் மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருக்கக் கூடிய கோழிக்கடை அமைந்திருக்கும் பகுதியை பார்ப்பார்களாக இருந்தால், எந்தளவிற்கு சுகாதார பரிசோதகர்கள் தமது கடமையைச் செய்கின்றார்கள் என்பது புலப்படும். உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு புகைப்படங்கள்…………

 

 

SHARE