வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பிரதான வாயிலில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதாரப் பணிமனை அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பிரதான வாயிலில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை அகற்றுவதில் நகரசபையினர் தாமதம் காட்டி வருவதாகவும், அதன் காரணமாகவே குப்பைகள் தேங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் பல்வேறு இடங்களுக்கும் சிதறிச் செல்வதால் நுளம்புகள் பெருகுவதுடன், மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாகவும் சுகாதார பணிமனை அலுவலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, வீடுகள், கடையோரங்களில் குப்பைகள், கழிவுகள் காணப்படின் அதற்கு தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்ற நிலையில், சுகாதார தொண்டர்கள் தங்கள் பணிமனையிலே கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.