வவுனியா சைவப்பிரகாச மாணவர்கள் 17 பேர் புலமைப்பரிச்சையில் விசேட சாதனை
இப்பாடசாலையின் அதிபர்களான அதிபர் திரு மதி தியாகசோதி யுவராஜா, உப அதிபர் சியாமளா கிருஸ்னானந்தம், வகுப்பாசிரியர்கள் திரு எஸ்.தர்சன், திருமதி ஆன்கிறஸ் சம்சன் றெஜி, திருமதி நதிவதனா லோகேஸ்வரன் ஆகியோருடன் 2016ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில்சித்தியடைந்த மாணவர்களை படத்தில் காணலாம்இதில் இரண்டு மாணவிகள் குலவிழி குகணேஸ்வரன் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டரீதியில் 3ம் இடத்தையும், ரமேஸ் சுரேன் என்பவர் 182 புள்ளிகளைப் பெற்று மாவட்டமட்டத்தில் 7வது இடத்தைப் பெற்றது சிறப்பம்சமாகும். இதனைவிட 100 -150 புள்ளிகளுக்கிடையில் 39 மாணவர்கள் ஆண், பெண் அடங்களாகப் பெற்றுள்ளார்கள். இதில் குறிப்பாக டிபித்சா 150 புள்ளிகளைப் பெற்றுள்ளமையானது ஒரு துரதிஸ்டவசமாகும். மேலதிகமாக ஒரு புள்ளியைப்பெற்றிருந்தால் இவரும் வெட்டுப்புள்ளிக்குள் இணைக்கப்பட்டிருப்பார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
குலவிழி குகணேஸ்வரன் 188 புள்ளி
ரமேஸ் சுரேன் 182 புள்ளி