வவுனியா திரைக்கலைஞர்கள் சங்கம் 29/08/2015 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

703

 

ஈழத்து சினிமாத்துறை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் இனிவரும் காலங்களில் கலைஞர்களின் பொறுப்புணர்வு அற்ற தன்மை, படைப்புக்களின் சந்தைப்படுத்தல் பிரச்சனை, ஊடகங்களின் அனாவசியமான விமர்சனங்களை தடுப்பதற்காக வவுனியா திரைக்கலைஞர்கள் சங்கம் 29/08/2015 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Mithuna (5)
வவுனியா திரைக்கலைஞர் சங்கத்தின் தலைவராக திரு.வி.சுபாஸ்கரனும், செயலாளராக திரு.சு.வினோத்தும், பொருளாளராக திரு.த.பிரதாபன் அவர்களும், உப தலைவராக திரு.த.சசிக்குமார் அவர்களும், உபசெயலாளர் திரு.அ.இமயவன் அவர்களும், பிரதம ஆலோசகராக திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் திரு.க.ஜெயந்தன், பிரபல நடிகையான மிதுனா , மற்றும் பிரபல குறும்பட இயக்குணர்கள் பெலிசியன், இமயவன், சுபாஸ்சிங்கம், கே ஜே, ரவி,  பொண்ணுங்களே இப்படித்தான் கதாநாயகன் கீரன், நகைச்சுவை நடிகன் சயந்தன், மற்றும் கலைஞர்கள், சசிக்குமார், பார்த்தீபன், குகன் ஆகிய பலர் கலந்துகொண்டனர். மேலும் இச் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ செய்தி ஊடகமாக நியூவவுனியா இணையம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதன்போது தலைவர் சுபாஸ்கரன் அவர்கள் ஈழத்து சினிமாத்துறையில் இச்சங்கம் நிச்சயம் மாற்றத்தை உருவக்கும் என நம்பிக்கை அளித்தார்.
SHARE