வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டம்

219

 

வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு

கோரி இன்று இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தனர்.

வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு கொடுக்கப்படாமை, மற்றும்

பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாமையை கண்டித்து 08-09-2015 இரண்டாவது

நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டமானது அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட

தலைவர்; எஸ்;.சித்திரன் தலமையில் நடைபெற்றது.

வவுனியாவுக்கு வருகை தந்திருந்த வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் போராட்டத்தில்

ஈடுபட்ட ஊழியர்களை சந்திக்க மறுத்ததுடன் பத்திரிகையாளர்களையும் சந்திக்க மறுப்பு

தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து எந்த சமரச பேச்சுவார்த்தைக்கும் நகரசபை ஊழியர்கள் உடன்படாத

காரணத்தால் நகரசபை நிர்வாகத்தால் பொலிசாரை தொடர்புகொண்டதையடுத்து வவுனியா

பொலிசார் நகரசபை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வவுனியா

நகரசபையில் செயலாளர் இல்லாத காரணத்தால் நாளை 09-09-2015 நகரசபை

நிர்வாகத்துடன் கதைத்து தீர்வு பெற்று தருவதாக பொலிசார் உறுதியளித்ததை

தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் வவுனியா நகரசபை ஊழியர்களால்

கையிடப்பட்டது.

இப்போராட்டமானது ஊழியர்களுக்கு காலத்திற்கு காலம் அரசினால்

விடுவிக்கப்படும் சுற்று நிருபங்களுக்கு அமைய சம்பளம் வழங்கப்பட வேண்டும்,

ஊழியர்களின் அடிப்படை சம்பளங்கள் குறைக்கப்பட்டு வழங்கப்பட்டமை

சீர்செய்யப்பட வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே உண்ணாவிரத

போராட்டம் நகரசபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

SHARE