வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பொலிஸாரின் வழமையான சோதனை நடவடிக்கையின் போது 70 0கிராம் கேரளா கஞ்சாவுடன் 33வயதுடைய வாரியபொல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் தமது வழமையான சோதனை நடவடிக்கையின்போது நேற்று இரவு 11மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ்ஸில் பயணித்த வாரியபொல பகுதியைச் சேர்ந்த 33வயதுடைய நபர் ஒருவர் தனது உடமையில் மறைத்து எடுத்துச் சென்ற 700 கிராம் கேளரா கஞ்சாவினை மீட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.