வவுனியா பறன்நாட்டங்கல்லில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று பனிக்கர்புளியங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பறன்நாட்டங்கல் அ.த.க. பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் தனுசியா பாலேந்திரன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்விற்கு அதிதிகள் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வில் முதியோரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், கலந்துகொண்டிருந்த முதியோருக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
முதியோர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதேச சபை உறுபபினர் திருமதி. அஞ்சலி, கிராம பொருளாதார உத்தியோகத்தர் திருமதி. நந்தீஸ்வரி, சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ.அசீஸ், பறன்நாட்டங்கல் அ.த.க. பாடசாலை அதிபர் திருமதி.அருந்தவராணி, ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.








