வவுனியா பிரதேச செயலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொடுப்பனவு
வழங்கப்பட்டது.
மைத்திரி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நாடளவிய
ரீதியில் கர்ப்பிணி பெண்களுக்கான போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று 29-03-2015 வவுனியா மாவட்டத்திலுள்ள 1000
கர்ப்பிணி பெண்களுக்கு வவுனியா பிரதேச செயலகத்தினால் 20000 ரூபா
பெறுமதியான உணவுப்பொருட்களுக்கான முத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில்
நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்
க.உதயராசா
எங்களுடைய நாடு வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடு என குறிப்பிட்டஅவர்
எதிர்காலத்தில் நல்ல சந்ததியை உருவாக்கினால் எமது நாடு எதிர்காலத்திலே
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாடாக உருவாகும் என சுட்டிக்காட்டினார். தொடர்ந்து
கருத்து வெளியிட்ட வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா
ஜரோப்பியர்களை விட நாங்கள் ஆற்றல் மிக்கவர்கள் ஆனால் கடந்த யுத்தத்தின்
காரணமாக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என குறிப்பிட்டார். தொடர்ந்து
கருத்து தெரிவித்த அவர் எங்களால் மீண்டும் அந்த ஆற்றல் மிக்க சுமுதாயத்தை
உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன் மைத்திரி
அரசாங்கத்திற்கு வாக்களித்ததன் பயனை இப்பொழுது அனுபவிக்கிறீர்கள் என
குறிப்பிட்ட வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா மக்கள் மைத்திரி
அரசிற்கு வாக்களித்ததன் பயனை முதலில் அனுபவித்தவர்கள் அரசாங்க ஊழியர்கள்
என சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகான
சபை உறுப்பினர்களான லிங்கநாதன்,தியாகராஜா, தர்மபால, ஜயதிலக, மேலதிக
அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன்,உதவி பிரதேச செயலாளர்
திருமதி சா.கர்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.