வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் விவசாயிகளுக்கு
நெல் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வானது வவுனியா பிரதேசசெயலாளர் க.உதயராஜா தலமையில் நடைபெற்றதுடன்
விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வும் அவர்களுக்கு நெல் மற்றும்
அரிசிபோன்றன தானமாக வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கோவிலில் வழிபாடு
நடத்தப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.
நெல் தானம் வழங்கும் நிகழ்வானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில்
கொழும்பு விகாரமாதேவி பூங்காவிலும், வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்கினேஸ்வரன் தலமையில் நல்லூர் கந்தசுவாமிகோவிலிலும், மன்னார்
மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு தலமையில் மடுத்தேவாலயத்திலும், கல்முனை
பெரிய பள்ளிவாசலிலும் மற்றும் நாடு பூராகவும் உள்ள 326 பிரதேச
செயலகங்களில் பிரதேச செயலாளர் தலமையில் 15-04-2015 நெல்தானம் வழங்கும்
நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பம்பைமடு, கோவிற்குளம், ஓமந்தை கமநலகேந்தர நிலையங்கள்
பங்களிப்பு வழங்கியிருந்தன.
நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன்,மாவட்ட
விவசாய பணிப்பாளர் திருமதி எல்.பி.ஈஸ்வரன், நகரசபை செயலாளர்
எஸ்.சத்தியசீலன் மற்றும் தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி
கிசோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்