வவுனியா பட்டானிச்சூர் பள்ளிவாசலில் மைத்திரியால சிறிசேன அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை
முன்னிட்டு விசேட ஆராதனை
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் பள்ளிவாசலில்
மைத்திரியால சிறிசேன அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட ஆராதனை நிகழ்வு
நடைபெற்றது.
பட்டானிச்சூர் முஸ்லிம் பள்ளிவாசலின் மௌலவி எஸ்.ஏ.அப்துல் சமட் தலமையில் நடைபெற்ற ஆராதனையில்
ஜனாதிபதிக்கு ஆசி தெரிவித்தும் இனங்களுக்கிடையில் நல்லுறவும் ஒற்றுமையும் நீடிக்க வேண்டியும் பிராத்தனை
நடைபெற்றது.
நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பொதுமக்கள் என
பலரும் கலந்துகொண்டனர்.