வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
1916 ஆம் ஆண்டு சிறிய கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று பல மாணவர்களை கொண்டு இயங்கி வருகின்றது.
இந் நிலையில் நேற்று இடம்பெற்ற நூற்றாண்டு விழாவின் முதல் நாள் அமர்வு போற்பிள்ளை அரங்கில் இடம்பெற்றது. இதன்போது இறுவட்டு வெளியீடு இடம்பெற்றதுடன் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், ஓய்வுபெற்ற பாடசாலை ஆசியரியர்கள், அதிபர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் முதல்நாள் நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கிழக்கு மாகாண கல்வி அமைசச்ர் தண்டாயுதபாணி, வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.கே. மஸ்தான், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ. மயூரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.