வவுனியா, புளியங்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை செய்து தருக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

387

 

வவுனியா, புளியங்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை

செய்து தருக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

unnamed (20) unnamed (21) unnamed (22)

வவுனியா, புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்

புளியங்குளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த குட்டிப்பிள்ளையார் குடியிருப்பு,

கல்மடு, இராமர் புளியங்குளம், பழையவாடி, புளியங்குளம் ஆகிய கிராமங்களைச்

சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் காரணமாக தாம் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய போதும் தக்கான அடிப்படை

வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை என ஆர்பபாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

தெரிவித்தனர். குறிப்பாக தமது கிராமத்திற்கு என ஒதுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை

அமைச்சர் ஒருவரின் தலையீட்டினால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மழை

காலம் தொடங்கவுள்ளதால் வீடுகள் இன்றி அவலப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்

அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தமது கிராமத்திற்கான மின்சாரம் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும்

இதனால் காட்டில் இருந்து வரும் யானை முதலிய விலங்களுடன் இருட்டில் வாழ்வதற்காக

போராடி வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தமது பிரதேசத்திற்கான வீதியைப்

புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட முன்னாள்

எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் இம் மக்கள் ஜனாதிபதிக்கான மகஜரினை

கையளித்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன் கருத்தத்

தெரிவிக்கையில் 2009 போர் முடிவுக்கு வந்த பின்னர் மக்களுடைய 28

கோரிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தோம் என

குறிப்பிட்ட அவர் மகின்த ராஜபக்ச தங்கள் கோரிக்கையை மறுத்ததுடன் உங்களுக்கு

என்ன தேவையோ அவைகளை இந்தியாவிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என

தெரிவித்ததாக குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்

கூட்டமைப்பு இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கிடம் யுத்தம் நடந்த

பிரதேசங்களுக்கு வீட்டுத்திட்டம் வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க 50000

வீட்டுத்திட்டம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய

அவர் அமைச்சர் ரிசாட்பதியுதீனுடைய தலையீடு காரணமாக பயனாளிகள் தெரிவில்

முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டினார். இதன் காரணமாக வீட்டுத்திட்டத்தில் 120

வீதம் முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கு 72 வீதமும், தமழ் மக்களுக்கு 18

வீதமான வீடுகளே வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE