வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று இரவு (19.7) இரு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்த கார் முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு எதிரில் வந்த காருடனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.