வவுனியா பொது வைத்தியசாலையின் அவலநிலை

511

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் போதிய அளவு கட்டில் வசதியின்மையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

நோயினை குணப்படுத்துவதற்காகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றோம். அப்படி இருக்கையில் இடுப்பு வருத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நோயாளர்கள் தரையில் படுத்து மேலும் வருத்தத்தை அதிகரித்துக் கொண்டு வீடு செல்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வசதிகள் அனைத்தும் நிறைந்த வைத்தியசாலை. புதிய கட்டிடங்கள், தொழில்நுட்பம் என சகல வசதிகளுடனும் மிளிர்கின்ற வைத்தியசாலை ஏன் இப்படியாக காணப்பட வேண்டும்? என கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கே.அகிலேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

எமது வைத்தியாசாலைக்கு தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே காணப்படுகின்றது. 42 கட்டில்கள் மாத்திரமே கொண்ட ஒரு நோயாளர் விடுதியில் 90 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மிகுதி நோயாளர்களுக்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு தரையில் படுக்க வைக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றது. விரைவில் இதற்குரிய தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

SHARE