வவுனியா பொருளாதார மத்திய மையத்தை முஸ்லீம்களுக்குதாரைவார்த்துக் கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது சகாக்களும்.

451

 

வவுனியா பொருளாதார மத்திய மையத்தை முஸ்லீம்களுக்குதாரைவார்த்துக் கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது சகாக்களும்.

DSC00121-1024x768
நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்து வந்த வவுனியா பொருளாதார மத்திய மையத்திற்கு தென்னிலங்கை அரசியல் ஒரு முடிவு கட்டியுள்ளது. இதற்குக் காரணம் வடமாகாணசபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தான். அதிலும் மிக முக்கிமான காரணம் வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் உள்ளடக்கப்படுகின்றனர்.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷாவினுடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கிராமத்தை அண்மித்த பிரதேசங்களில் சந்தைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பண்ணைகள், பால் பண்ணை, நெசவுக் கைத்தொழில்சாலை, காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை, யாழ்ப்பாணம் ஐஸ் பக்டறி இவ்வாறு வடக்கிழும், கிழக்கிழும், தென்னிலங்கையிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது மட்டுமன்றி, மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு மஹிந்த உதய விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிர்ணயக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பல்வேறு பயன்களைப் பெறுகின்றனர். அது மட்டுமன்றி வெளிநாடுகளில் கடன்பட்டு பாலகட்டுமானங்கள், வீதிப்புனரமைப்புக்கள் என்பனவும் செவ்வனவே செய்யப்பட்டு வந்தது. அப்போது இயங்கிக் கொண்டிருந்த வடமாகாணசபை மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக பிரேரணைகளை முன்னெடுத்துச் செய்யவோ, அல்லது அதனைத் தடுத்து நிறுத்தவோ முயற்சி எடுக்கவும் மில்லை, தடுத்து நிறுத்தவுமில்லை. அதற்கு அப்பால் மஹிந்த ராஜபக்ஷ தனது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.

images (1)

இதில் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையும் மாறி மாறி பேரரணைகளையும், கருத்துக்களையும் கொண்டு வந்தபொழுது அவையும் பிரதி பலனளிக்கவில்லை. இக் காரணங்களினாலேயே மஹிந்த ராஜபக்ஷாவினுடைய அரசாங்கம் கவில்க்கப்பட்டது.
ஒரு பொருளாதார மத்திய மையத்தினைக் கட்டுவதற்கூட வடமாகாணசபையின் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாத நிலையில் இந்த வடமாகாணசபை இருப்பதனுடைய அர்த்தம் பிரியோசனமற்றது. வடமாகாணசபைக்குட்பட்ட பிரதேத்தில் ஒரு பொருளாதார மத்திய மையத்தையோ, ஏனைய அபிவிருத்திகளையோ மேற்கொள்வதற்கு மத்திய அரசு தான் இறுதித் தீர்மானம் எடுக்கவேண்டுமாக இருந்தால் வடமாகாணசபை இயங்குவதனுடைய அர்த்தமென்ன? சிங்களப் பேரினவாதத்தினுடைய அதிகாரம் தமிழ் மக்கள் மீது தினிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை அழிப்பதெனக் கூறி தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைப்பதற்கு கடந்த அரசாங்கமும், இந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் ஒத்த அரசியலையே மேற்கொண்டு வருகின்றது.
பொருளாதார மத்திய மையம் அமைக்கப்பெறுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டு ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையில் தாண்டிக்குளமா? ஓமந்தையா? என்ற தீர்மானம் எடுக்கமுடியாத நிலையில் வடமாகாணசபையின் முதலமைச்சருக்கு ஒரு கூட்டமும், அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு மற்றுமொரு கூட்டமும், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு இன்னொரு கூட்டமும், அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஒரு கூட்டமுமாக இந்த பொருளாதார மத்திய மையம் வவுனியாவில் அமையப்பெறுவதற்கு பலவேறு தரப்பட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.

hqdefault vavuniya-2

P1010221-Copy

இதில் உள்ளடக்கப்பட்ட அனைவரும் தமிழ் அரசியல் வாதிகளே! தீர்க்கமான முடிவை மாகாணசபையோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எடுத்திருக்க வேண்டும். வடமாகாணத்தில் இரண்டு பொருளாதார மத்திய மையம் அமையப்பெறுவதென்பது தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முடக்குமொரு செயற்பாடாகும்.
குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய மையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அனுமதி கொடுக்க மாட்டார். ஒரு வேளை அமைச்சர் ரிஷட் அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய மையத்தை அமைக்களாம். அவ்வாறு அமைக்கப்பட்டாலும் அது கடும் எதிர்ப்புக்கள் மத்தியிலேயே நடைபெறும். இக்காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஒரு முடிவுக்கு வரலாம் இவ் பொருளாதார மத்திய மையத்தை முஸ்லீம் பிரதேசங்களுக்கு நகர்த்தவேண்டிய தேவை அவருக்கு ஏற்படும். இவர் பொருளாதார மத்திய மையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு முன்வரமாட்டார். ஆகவே இவ் பொருளாதார மத்திய மையம் முஸ்லீம் பிரதேசமொன்றில் அமைக்கவேண்டிய தேவை அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு ஏற்படும். இதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கான தனி வாக்குகளை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பெற்றுக் கொள்வார். மாக்குளத்தில் அமையவிருக்கின்ற பொருளாதார மத்திய மையம் தமிழ் மக்களுடைய பிரதேசத்தில் அமையவிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இவ்விடத்தில் கட்டப்படுகின்ற பொருளாதார மத்திய மையமானது பொதுமக்கள் பயனடையும் வகையில் அமையப்பெறுமா என்பது கேள்விக்குறி குறிப்பாக சுப்பட் மார்க்கெட் ஒன்று அமைக்கபடுவதென்பது போக்குவரத்து வசதி, மக்கள் செரிந்து வாழும் இடங்களிலேயே அமைப்பார்கள் இது உலக நடைமுறை. கிராமதிலிருந்து அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நகரத்திலிருந்து அபிவிருத்திகள் மேற்கொள்ளபட்டே கிராமத்திற்குச் செல்கின்றன. தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற காரணத்தினால் சிங்களப் பேரினவாதத்துடன் இரண்டரக் கலந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷாவினுடைய நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே தனது அரசியலை முன்னெடுத்து வருகின்றார். மஹிந்த ராஜபக்ஷாவை சர்வதிகாரியாகக் கூறிய அவர். தானும் ஒரு சார்வதிகாரியாகவே மக்களுக்கு காட்டி வருகின்றார்.

Vigneshwaran-01

இது தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த பொருளாதார மத்திய மையத்திற்கு மோதிக் கொள்கின்ற பொழுது நடுநிலையாக இருந்து தீர்ப்புக் கூறவேண்டிய சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் பக்கச் சார்பாக ஓமந்தையில் தான் இந்த பொருளாதார மத்திய மையம் அமையப்பெறவேண்டும் என்று கூறியது. இவர் முதலமைச்சராக இருக்கும் பொழுது எப்படிச் செயற்பட்டிருப்பார் என்பது இதிலிருந்து வெளிப்படுகின்றது.
இவர் நீதியரசராக இருந்தபொழுது பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த கைதிகளுக்கு பத்து, இருபது, இருபத்தைந்து வருடங்கள் அடங்களான சிறைத் தண்டனைகளை வழங்கியிருக்கின்றார். இவை ஆதாரபூர்வமாக உள்ளது. இதனை ஆதாரத்துடன் அடுத்து வரும் கட்டுரைகளில் தருகின்றோம். இவை இவ்வாறு இருக்க தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்கள் வருகின்ற பொழுதும், அபிவிருத்திகள் வருகின்ற பொழுதும் தமது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களுக்குக் கிடைக்க இருக்கின்ற நன்மைகளைக்க தட்டிக் கழிப்பதில் அண்மைக்காலமாக முதலமைச்சர் செயற்படும் விதங்கள் கவலைக்குரியது. கட்சி சார்ந்த அரசியலைச் செய்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னமாக உடைப்பதிலேயே அவர்களுடைய முன்னெடுப்புக்கள் இருக்கின்றன. இதிலொரு விடயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள இருநூறுகோடி நிதியென்பது வன்னிநிலப்பரப்பில் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டதுக்கு ஈடு செய்யமுடியாது. அந்த வகையில் பேரினவாத அரசே தமிழ் மக்கள் இடையேயும், தமிழ் அரசியல் வாதிகள் இடையேயும் குழப்பநிலையை உருவாக்கி, வடமாகாண சபையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இரண்டாக பிரிவடையச் செய்து அதற்குள்ளும் ரெலொ, புளெட், ஈபிஆர்எல்எப், தமிழரசுக் கட்சி இவர்களையும் பிளவு பட வைத்து அமைச்சுப் பதவிகளை இவர்களுக்க வழங்கி அரசாங்கம் தமிழ்க் கட்சிக்குள்ளேயே இவர்களை இழுத்துக்கொள்ளும் செயற்பாட்டினை தற்பொழுது இந்த நல்லாட்சியிலே முன்வைத்துள்ளது. சமாதான ஒப்பந்தம் எனக் கூறி விடுதலைப்புலிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க இன்று மிகத் தந்திரோபயமாக சிறுபான்மை இனத்துக்குள் மோதல்களை கட்டவிழ்த்துள்ளார். ஏற்கனவே சுக்குநூறாக உடைந்து போயுள்ள சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் இன்னும் பிளவு படுத்துவதன் ஊடாக அரசாங்கம் சிங்கள தேசம் பௌத்த நாடு என்று உலகமெங்கும் காண்பிப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றானர். டட்லி சேனநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் வழங்குவதில் எவருக்குமே உடன்பாடில்லை.

mathri-jaffna

அவ்வாறு ஆட்சி புரிகின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முன்வருகின்ற பொழுது அவர்களுக்கான எதிர்ப்புகளை சிங்கள தேசம் மேற்கொள்ளும். ஏற்கனவே இணைந்த வடகிழக்கை பிரித்துவைத்துள்ள ஜே.வி.பி இதில் தற்போது இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் வடகிழக்கை இணைப்பார்களா? பொலிஸ் காணி அதிகாரம் வழங்குவார்களா? இவற்றை தமிழ் மக்களுக்கு வழங்கமுடியாத சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக பேசுவது அணைத்தும் போலியானவை. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை சர்வதேசநாடொன்றின் மத்தியஸ்தனுடையே பெற்றுக் கொள்ள முடியும். அல்லது மீண்டும் ஆயுதமேந்திப் போராடித்தான் எமது சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதனையே தொடர்நது வந்துள்ள மைத்திரி, ரணில் கூட்டு அரசாங்கம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
பொருளாதார மத்திய மையம் போன்று இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை வடகிக்கு பிரதேசங்களிலே உருவாக்கி அதிலே குழறுபடிகளை உருவாக்கி தமிழ் மக்களுடைய வாக்குகளை சுவீகரித்துக் கொள்வதற்கு சிறுபான்மை மக்களிடத்தில் குழப்பநிலையை தோற்றுவித்து வருகின்றது. வடமாகாணசபையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ முடிவெடுக்க முடியாத நிலையில் மத்தியரசு முடிவெடுத்து தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுகின்ற பொழுது, ஒரு கூட்டம் அரசாங்கத்தை நோக்கிச் செல்லும். அப்பொழுது தேசியம், சுயநிர்ணயா உரிமை என்பதைக் கூட அவர்கள் மறந்து விடுவார்கள். பொருளாதார மத்திய மையம் அமைப்பதென்பது தொடர்பில் குழப்பங்களை உருவாக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களையும், வடமாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையேயும் இந்த பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களும், முரண்பாடுகளும் பெருகிவரும் இந்த நிலையில், எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றும் அடுத்த நிகழ்வாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வவுனியாவில் ஒருபொருளாதார மத்திய மையமும், மாங்குளத்தில் மற்றுமொரு பொருளாதார மத்திய மையமும் அமையப்பெறுவது என்பது அரசாங்கம் சிறுபான்மை இனத்தை கேலி செய்யும் ஒரு செயற்பாடாகவே அமையப்பெற்றுள்ளது. கடைசியாக மாங்குளம் ஆட்டுப் பண்ணையாகவும், ஓமந்தை மாட்டுப் பண்ணையாகவும் மாறும் ஒரு சூழ்நிலைக்கே இவ் அரசாங்கம் பொருளாதார மத்திய மையத்தில் விளையாடுகின்றது. ஏற்கனவே மத்தள விமானநிலையம், அம்பந்தோட்டை துறைமுகம், இந்த இரண்டும் பாரிய முதலீட்டில் மஹிந்த அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட பொழுதும் நட்டத்தில் இயங்கி இறுதியில் நெற்களஞ்சியமாக மாற்றப்பட்ட சுவர்சியமான விடயத்தையும் நீங்கள் அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழரசுக் கட்சியையும், அவர்களுடைய செயற்பாடுகளையும் குள்ளநரி போன்று உடைப்பதற்கு பேரினவாத அரசினால் அனுப்பப்பட்ட ஒருவர் என்றே மக்களாளும், அரசியல் வாதிகளாலும் கூறப்படுகின்றது.

images (2)

இறுதியாக வானத்தால் போன சனியனை ஏணி வைத்து இறங்கிய செயற்பாட்டினைப் புரிந்த சுமந்திரனும், சம்பந்தனுமே இதற்குப் பதில் சொல்லவேண்டும். வவுனியாவில் அமையப்;படவிருந்த பொருளாதார மத்திய மையம் முஸ்லீம்களுக்கு கைமாறியுள்ளது தொடர்பில் தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் என்ன சொல்லப் போகின்றார். வாசுதேவநானயக்காரவின் சம்மந்தியென்பதை பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் காட்டியுள்ளேன் என்பதைக் கூறப்போகின்றாரா?

SHARE