வவுனியா மருந்தக களஞ்சியத்தில் திடீர் தீ பரவல்..!

166

வவுனியா – வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்து களஞ்சியத்தில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம், இன்று இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நகரசபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன், வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் 30 நிமிடங்களாக போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

களஞ்சியசாலையில் ஆயுள்வேத மருந்து தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE