வவுனியா மாவட்டச் செயலாளர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படவில்லை என சுதேச விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டச் செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. வவுனியா மாவட்டச் செயலாளருடன் சுமுகமாக கடமையாற்ற முடியாது என முறையிட்டு அவரை இடமாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எனக்கு அறியக் கிடைத்துள்ளது. மாகாணசபைக்குள் மத்திய அரசாங்கத்திற்கு தொடர்புடைய ஏதேனும் ஒர் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது குறித்து உரிய முறையில் கிரமமாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளரின் பணிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளோ குற்றச்சாட்டுக்களோ அமைச்சரவைக்கு கிடைக்கவில்லை. இதனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது என அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.