வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள்
வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்
வழங்கும் நிகழ்வு நேற்று மாலை வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர்
அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு
பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கே இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி
வைக்கப்பட்டது. முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலப்பகுதியில் அரசுடன்
இணைந்திருந்த கட்சிகளைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு மோட்டர்
சைக்கிள்கள் வழங்கப்பட்டிருந்தன. இந் நிலையில் விடுபட்டிருந்த ஏனைய
உறுப்பினர்களுக்கே இன்றைய தினம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம்,
வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஜயதிலக, மாவட்ட
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் குமார, ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னிக்கான
முகாமையாளர் ரஞ்சித், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களான கருணாதாச,
இந்திரன் சஜீந்திரா மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் இதன் போது
கலந்துகொண்டனர்.