வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களை தடுப்பதற்கு அரச தலைவருடன் பேசி உடன் நடவடிக்கை எடுங்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கம் அவசரக்கடிதம்

174

 

வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களை தடுப்பதற்கு
அரச தலைவருடன் பேசி உடன் நடவடிக்கை எடுங்கள்
எதிர்க்கட்சி தலைவருக்கு மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கம் அவசரக்கடிதம்

யுத்தகாலத்திலும், யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்
பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனால் வவுனியா மாவட்டத்தின்
இனப்பரம்பலானது மாற்றமடைந்துவருகின்றது. இந்த நடவடிக்கை தொடருமானால் திருகோணமலை அம்பாறை
மாவட்டத்தின் நிலைதான் வவுனியாவிற்கும் ஏற்படுமென வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் சகாதார
அமைச்சருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்கட்சி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களுக்கு
அனுப்பிவைத்துள்ள அவசரக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பரிவு
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகாவலி எல் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில்
கடந்த ஆட்சியில் நன்கு திட்டமிட்ட வகையில் பெரும்பாண்மையினக் குடியேற்றங்கள் நடந்தேறியுள்ளன.
கி.சே.பிரிவு கிராமம் வாக்காளர் என்ணிக்கை
வெடிவைத்தகல்லு வெகரதென்ன 25
பதவியபடிவம்-1 (கம்பிலிவெள) 94
போகஸ்வெள-1 495
போகஸ்வெள-2 137
கஜபாபுர கஜபாபுர 111
மொனரவெள 186
மாயாவெள 213
கல்யானபுர கல்யானபுர-1 355
நாமல்புர 75
சதாஹரித்தகிராமம் 01
எத்தாவெட்டுனுவெள எத்தாவெட்டுனுவெள 747
நிக்கவெள இடது சம்பத்கம 116
றணவிருகம 62
நிக்கவெள இடது (இசுறுபுர) 07
நிக்கவெள இடது (சங்கபோபுர) 00
நிக்கவெள இடது 365
நிக்கவெள வலது நிக்கவெள வலது 598

சப்புமல்தன்ன 315
வவுனியா வடக்கில் மொத்தமாக இதுவரையில் 4083 வாக்காளர்களை உள்ளடக்கியதாக குடும்பங்கள்
குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள கச்சல்மகிளங்குளம் எனப்படும் கைவிடப்பட்ட குளம் கடந்த வருடம்
அனுராதபுரமாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டு குளத்திற்கு கீழான
காணப்படும் நீர்ப்பாசனக்காணிகள் குடியேற்றவாசிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
இக்;குளத்திற்கு மிகவும் அண்மையிலுள்ள கொக்கச்சாங்குளம் என அழைக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீக காணிகள்
கலாபோகஸ்வ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு வேறுமாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள்
குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேச செயலகப்பரிவு
வவுனியா பிரதேச செயலகப்பரிவிலும் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளது.
மருதங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிராமங்களில் 1005 வாக்காளர் உள்ளடங்கலாக குடும்பங்கள்
குடியேற்றப்பட்டள்ளனர்

கி.சே.பிரிவு கிராமம் வாக்காளர் என்ணிக்கை
மருதங்குளம் நாமல்கம 194
சலலிகினிகம 264
நந்தமித்திரகம 547
மொத்தம் 1005
வவுனியா பிரதேச செயலகப்பரிவில் மொத்தமாக இதுவரையில் 1005 வாக்காளர்களை உள்ளடக்கியதாக குடும்பங்கள்
குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
செட்டிகுளம் பிரதேச செயலகப்பரிவு
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்களம் கிராம அலுவலர் பிரிவில் 151 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
செட்டிகுளம் பி.செ. பிரிவுக்குட்பட்ட கிராமமாக இருந்தபோதும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு
உள்வாங்கப்பட்டு அவர்களால் 151 குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்காக BOD தயாரிக்கப்பட்டது. அத்துடன் 100
வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 40 குடும்பங்கள் மட்டுமே வசித்துவருகின்றார்கள். இவர்கள்
அனைவரும் அனுராதபுரம் மாவட்டத்தில் வதியும் இராணுவக்;குடும்பங்களாகும்.
கி.சே.பிரிவு கிராமம் வாக்காளர் என்ணிக்கை
பாவற்குளம் பாவற்குளம் 151 குடும்பம்
இதேபோன்று மாணிக்கம் பண்ணை (மெனிக்பாம்) பகுதியில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை
தற்காலிகமாக தங்கவைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இடைத்தங்கல் முகாம் அமைந்த 1089 ஏக்கர் காணியும் தற்போது
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காணி அரச காணியென்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் நீண்டகாலமாக
செட்டிகுளம் பிரதேச மக்களால் பருவகாலப்பயிர்ச்செய்கைகாக பயன்படுத்தப்பட்டதாகும். எனினும் நாட்டின்
அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.
இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்பட்டபோது அனைத்து உட்கட்டுமான வசதிகளும் இப்பகுதியில்
செய்யப்பட்டிருந்தது. (உள்ளக வீதிகள், மின்னினைப்பு, கிணறுகள்) தற்போது இக்காணியின் ஒருபகுதியில் இராணுவ
முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் நடாத்தப்படுகின்ற விலங்கு பண்ணை, விவசாய பண்ணைகள்
நடாத்தப்பட்டுவருவதுடன்; இராணுவத்தினரால் உல்லாசவிடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்காணியில் பெருந்தொகையான சிங்களக்குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக
அறியமுடிகின்றது. இதற்கு மேலதிகமாக 146 ஏக்கர் பொதுமக்களுடைய காணிகள் அரச படைகளின் பயன்பாட்டு;க்காக
கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மல்வத்து ஓயா (கீழ்மல்வத்து ஓயா நீர்த்தேக்க திட்டம்) இத்திட்டமானது அனுராதபுரம்-வவுனியா மாவட்டங்களினூடாக
ஊடறுத்து பாயும் அருவியாற்றைமறித்து தந்திரிமலை பிரதேசத்தில் அணைக்கட்டொன்றை அமைப்பதினூடாக
உருவாக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அனுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி பிரதேச
செயலக பிரிவிலுள்ள ஒருபகுதி காணிகளும், வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னசிப்பிக்குளம்
கி.சே.பிரிவிலுள்ள 1430 கெக்ரேயர் காணியும் சுவீகரிக்கப்பட்டவுள்ளது. அத்துடன் 05 சிறிய குளங்களும் மேட்டுக்காணி
11ஏக்கர், வயற்காணி 625.75 ஏக்கரும் உள்ளடக்கப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று காணியாக முதலியார்குளம் கி.சே.பிரிவில் கப்பாச்சி கிராமத்தில் 1000
ஏக்கர் காணி ஒதுக்கி தருமாறு கீழ்மல்வத்து ஓயா திட்ட பணிப்பாளரால் பிரதேச செயலாளருக்கு கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 11 ஏக்கர் மேட்டுக்காணியும், 625.75 ஏக்கர் வயற்;காணியுமாக மொத்தமாக 636.75
ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ள நிலையில் மாற்றுக்காணி வழங்குவதற்காக 1000 ஏக்கர் காணி பிரதேச செலாளரிடம்
கோருவதன் நோக்கமென்ன.
அத்துடன் இதுவரையில் இத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில்
கலந்துரையாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இதுதொடர்பில் அரச தலைவருடன் பேசி திட்டமிட்ட வகையில் நடைபெறும் இனப்பரம்பலை பாதிக்கும்
செயலினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு தங்களை தயவாக கெட்டுக்கொள்கின்றேன் என்று அந்தக்கடிதத்தில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE