வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் மீள்தகவமைவுக் கலந்துரையாடல்

320
காலம்: 05.03.2016 (சனிக்கிழமை)
நேரம்: பிற்பகல் 2.00 மணிக்கு
இடம்: இந்திரன்ஸ் விருந்தினர் விடுதி (வவுனியா மத்திய தொடருந்து நிலையத்துக்கு
அருகாமையில்)
நிகழ்ச்சி நிரல்:
தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 15 உறுப்பினர்களைக்கொண்ட தலைமைக்குழுவையும், பிரதேச இணைப்பாளர்களையும் மீளத்தெரிவுசெய்து கட்டமைத்தல்.
பிரஜைகள் குழுவின் கடந்தகால செயல்பாடுகள் – நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்தலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானித்தலும்.
புதிய உறுப்பினர்களை உள்ளீர்த்தல்:
இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டதும் – தேர்தல்களை சந்தித்ததுமான ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில், எவ்வகையிலும் உறுப்புரிமை அற்றவராக இருத்தல் வேண்டும்.
அரச – அரச சார்பற்ற மற்றும் உள்@ர் சிவில் சமுக அமைப்புகளில் நிதி விவகாரங்களில் தவறிழைக்காதவராகவும், நேர்மையற்ற நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் சமுக நம்பகத்தன்மையை இழக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.
எவ்வகையான தேர்தல் அரசியலிலும் ஈடுபடும் நோக்கமற்றவராகவும், ஆட்சியாளர்களினதும் – அதிகார வர்க்கத்தினதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வீதிவரைக்கும் வந்து போராடும் நெஞ்சுரம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
தகுதி காண்போரே !!! உளத்தூய்மையுடன் வாருங்கள்… கொஞ்சம் பாரம் தூக்குங்கள்… இனியொரு விதி செய்வோம். மண் பயனுறட்டும் !!!
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்’
SHARE