வவுனியா மாவட்ட, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கூளாங்குளம் வீதியின் 1.5 கிலோ மீட்டர் வரையான வீதி வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 25-11-2015 புதன் கிழமை மதியம் 1:30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் விசேட வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சரின் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டமானது மக்களது தேவைகளை சரியான முறையிலே இனங்காணப்பட்டு குறுகிய தூரங்களானாலும் அவை நிரந்தரமாக பயன்படுத்தக் கூடிய வகையிலே இடம்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன் நிகழ்வுக்கு வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் அவர்களும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.ரகுநாதன் அவர்களும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.