வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்

314
வவுனியா வடக்கு மீள்குடியேற்ற கிராமமான பட்டிக்குடியிப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்வதாக மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.

வவுனியா வடக்கு, பட்டிகுடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம், பாவற்காய்குளம், பட்டிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குள் மாலை வேளைகளில் ஊடுரும் யானைகள் மக்களது வீடுகள், கொட்டகைகளை சேதப்படுத்துவதுடன், வீட்டில் உள்ள நெல் மூடைகள், பயன்தரும் பயிர்ச் செய்கைகளையும் நாசப்படுத்தி வருகின்றது.

மக்கள் குடியிருப்புக்களுக்கு முழுமையாக மின்சாரம் கூட இல்லாத நிலையில் இரவு இரவாக பெரல்கள், தகரங்களை அடித்து யானைகளை விரட்ட வேண்டியுள்ளதாகவும், தமது பொருளாதார பயிர்கள் முழுமையாக யானைகளால் நாசமாகிப் போவதாகவும் கூறுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விட்டுள்ளனர்.

SHARE