வவுனியா வாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! அவசர எச்சரிக்கை

207

வவுனியா சதொச கிளையில் விநியோகிக்கப்பட்ட சீனியில் யூரியா உரம் கலந்துள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் வவுனியா நகர சபை மற்றும் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியில் மாற்றங்கள் உள்ளதாக நுகர்வோர் முறைப்பாடு செய்தனர். இதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சதொசவில் சீனி பெற்றுக்கொள்வதனை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சதொசவில் பெற்ற சீனியை, சிறுபிள்ளைகள் அல்லது வயோதிபர்களுக்கு வழங்கியிருந்தால் உடனடியாக அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சதொச கிளையில் பணியாற்றிய நபர் ஒருவரினால் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியா உரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு பயன்படுத்திய பைகளினால் ஏற்பட்ட மாற்றமே இந்த ஆபத்தான நிலைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதனை பரிசோதிக்காமல் விற்பனை செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE