வவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது
வருடம் நினைவு கூரப்பட்டது.
கடந்த 18-11-2006 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் வவுனியா விவசாய கல்லூரி
வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 9வது ஆண்டு நிறைவு நினைவு
தினம் இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா விவசாயக் கல்லூரியில் அதிபர்
திருமதி குமுதினி சந்திரகாந்தன் தலமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
மாணவர்களின் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கல்லூரியின்
அதிபர் திருமதி குமுதினி சந்திரகாந்தன் அவர்களால் நினைவுச் சுடர் ஏற்றி
வைக்கப்பட்டதை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட சங்கரலிங்கம் கிந்துஜன்,
சித்திரவேல் கோபிநாத், இராமச்சந்திரன் அச்சுதன், சித்திக்காசன் றிஸ்வான்,
திருநாமம் சிந்துஜன் ஆகியோரின் படங்களுக்கு அதிபர், ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளால் மலர்தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இலங்கை விவசாயக் கல்லூரியின் அதிபர் திருமதி குமுதினி
சந்திரகாந்தன் அவர்கள் படுகொலை சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக இரத்ததான நிகழ்வு ஒன்று
விவசாயக்கல்லுரி மாணவர்களால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி செந்தில் குமரன், மனிதவள
உத்தியோகத்தர் திருமதி சிவகுமாரன், விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும்
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.