பாடசாலை சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் வாகனம் மோதியதில் பரிதாபகராமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
மகியங்கனைப் பகுதியின் குருவித்தென்ன மகா வித்தியாலயத்தின் 9 வயது நிரம்பிய எம். எம். மலிச கவிஷான் மனத்துங்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிசார் மேற்கொண்டதுடன் மாணவனை மோதிய வாகனத்தின் சாரதியைக் கைது செய்துஇ மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததுள்ளனர்.
நீதவான் நீதிபதி உத்தரவிவன் பேரில் சாரதியை எதிர்வரும் 16.10.2018ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவுவிட்டார்.
குருவித்தென்ன மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் பங்கேற்று வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.