தற்காலிக அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளன.
ஜப்பானிய யெண்ணின் பெறுமதி பாரியளவில் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் வாகனங்களின் விலைகள் மூன்று முதல் நான்கு லட்ச ரூபாவினால் உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி மாற்று விகிதங்களில் நிலவும் தளம்பல் நிலைக்கு தீர்வு காணும் வரையில் தற்காலிக அடிப்படையில் வாகன இறக்குமதியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 15 வீத வெற் வரி அதிகரிப்பு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளில் தாக்கத்தை செலுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.