வாகன விபத்தில் 7 வயது சிறுவன் பலி

269
குளியாப்பிட்டிய-ஹெட்டிபொல பிரதான வீதியின் மலகனே சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

பாதையில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளின் மீது மோட்டார் வண்டி ஒன்று மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனும், மற்றுமொரு சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தினை அடுத்து மோட்டார் வண்டியின் சாரதியை ஹெட்டிப் பொல பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

accident-

SHARE