வாகன விபத்து: பௌத்த பிக்கு ஒருவர் காயம்

93

 

முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது ஹொரவ்பொத்தான பிரதான வீதி, வரோதயநகர் பகுதியில் இன்று (11.01.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம்
யுக்திய செயற்திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த முச்சக்கர வண்டி தடுமாற்றத்தில் நிறுத்த முற்பட்டபோது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பௌத்த பிக்கு இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE