வாகரை கண்டலடி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற பாற்குடப்பவனி!

277

மட்டக்களப்பு வாகரை கண்டலடி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சப் பெருவிழாவின் மூன்றாம் நாளாகிய இன்றைய தினம் பாற்குடப் பவனி வெகு சிறப்பாக இடம்பெற்றது.

பாற்குட பவனி புளியங்கண்டலடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைந்ததும் விஷேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றன.

பாற்குட பவனி நிகழ்வில் பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் கலந்துகொண்டதுடன் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகியது. ஆறு நாட்களைக் கொண்ட உற்சவ பெருவிழா எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடையவுள்ளது.

இதேவேளை, கண்டலடி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பெருமை மற்றும் அம்மனின் கும்மிப் பாடல் அடங்கிய இறுவட்டு வெளியீட்டு நிகழ்வொன்றும் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (4)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

SHARE