வாகரை சின்னத்தட்டுமுனை திருமகள் முன்பள்ளியின் சரஸ்வதி பூசை விழா சனசமூக நிலைய கட்டடத்தில் இன்று (10) காலை நடைபெற்றது.
முன்பள்ளியின் தலைவி எஸ்.ரயந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, எஸ்.கிருபை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ.எஸ்.பரம்மன், ந.பாக்கியராசா, மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பாடசாலையானது மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் இயங்கி வருவதுடன், பெற்றோரின் வறுமை காரணமாக மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது.
அத்தோடு இப்பூசை ஒழுங்குகளுக்கான உதவிகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி வழங்கியுள்ளதாக முன்பள்ளியின் தலைவி எஸ்.ரயந்தினி தெரிவித்துள்ளார்.