2016ஆம் ஆண்டில் தேசிய கல்வி கல்லூரிகளில் நடைபெறும் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் போது அந்த விண்ணப் பத்திரத்துடன் சான்று படுத்தப்பட்ட வாக்காளர் பதிவேட்டுப் பிரதி கிராம சேவையாளர் சான்றிதழ் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
க.பொ.த.(உ.த) பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய கல்வி கல்லூரிகளுக்கு மாணவ பயிலுநர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வின் போதே அந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை கல்வியமைச்சு விசேட செய்தியாக வெளியிட்டுள்ளது.