வாக்குச்சாவடியில் அஜித், விஷால், ஆர்யாவிற்கு நடந்தது என்ன?.. இன்னும் பல தகவல்கள்!..

287

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இன்று நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முதல் நட்சத்திரமாக தனது வாக்கை பதிவு செய்துவிட்டார்.

தல அஜித்

ஓட்டு போடங்க என்று இத்தனை நாள் கேட்டது போய் இப்போது நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம், நீங்கள் போடுங்கள் என்று கூறும் வசனம் தான் கேட்கிறது. இந்நிலையில் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முதல் ஆளாகவே வந்து ஓட்டிளித்துள்ளார் அஜித்.

அப்போது அவருக்கு தவறுதலாக வலது கையில் நடுவிரலில் தப்பாக மை வைத்துள்ளனர். ஆனால் மை வைத்த விரலை மட்டும் காட்டினால் தப்பாக ஆகிவிடும் என்பதற்கான மொத்த விரலையும் காட்டியிருக்கிறார். அஜித்தின் இந்த செயலால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆர்யா, விஷால்

பிரபல நடிகர் விஷால் , ஆர்யா இருவரும் ஒன்றாக இணைந்து சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்தனர். சரியாக 11 மணிக்கு அவர்கள் வர பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

உடனடியாக காவல்துறையினர் இரண்டு பேரையும் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, புகைப்படக்காரர்கள் விஷாலையும், ஆர்யாவையும் படம் எடுக்க முயன்றுபோது பூத் அதிகாரிகள் தடுத்தனர்.

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து புகைப்படக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்நிலையில் விஷால் மற்றும் ஆர்யா மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர். வாக்கு பதிவு செய்த பின் அங்கு கூடி இருந்த மக்கள் ஆர்யா விஷாலுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

வைரமுத்து, சுந்தர்.சி, குஷ்பு,

இன்று நடந்து வருகின்ற சட்டமன்ற வாக்கு பதிவில் பிரபலங்கள் பதிவு செய்து வருகின்றனர். வைரமுத்து, குஷ்பு, பிரபு, விவேக், கருணாஸ், சரண்யா மற்றும் பொண்வண்ணன், பிரசன்னா, மற்றும் நடிகர் நடிகைகள் தங்களது வாக்குகளை தெரிவித்து வருகின்றனர்.

தங்களது கடமையை செய்துவிட்டதாகவும் மேலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என சொல்லமுடியவில்லை என தெரிவித்துள்ளனர். அநேக கட்சிகள் போட்டியிடுவதால் கடந்த ஆண்டை போன்று கனிக்க முடியவில்லை.

மேலும் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பதனால் யாருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.

தேர்தலைப் பற்றி மற்ற நட்சத்திரங்களின் கருத்து

தமிழக சட்டமன்ற தேர்தல் பற்றி டி.ஆர். அவர்களின் கருத்து

 

SHARE