தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பாகும் பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு இரசிகர் பட்டாலம் ஏராளம் உண்டு.
இந்த நிகழ்ச்சியில் காதல், கண்ணீர், கோபம், சண்டை என நாளுக்கு நாள் பிரச்சினைகளும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் பிக்பொஸ் சீசன் 3யில் கவினுக்கும் – லொஸ்லியாவுக்கும் இடையிலான காதல் பெருமளவு பேசுப்பொருளாகியது. இவர்களின் காதலை பிக்பொஸ் வீட்டின் சக போட்டியாளரான சேரன் உள்ளிட்ட இரசிகர்கள் பலரும் எதிர்த்திருந்தனர்.
இருப்பினும் இவர்களின் காதல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை பிக்பொஸ் வீட்டிற்குள் வருகை தந்து அவருக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
இதனை அடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் கவின் – லொஸ்லியா இருவரும் தனிமையில் அமர்ந்து பேசுகின்றனர். இதன்போது லொஸ்லியா it’s over என கூற கவினும் அதனை ஏற்றுக்கொள்கிறார்.
இவை அனைத்தும் நாம் அறிந்ததுதான். இதற்கு முன்பதாக கவின் பிக்பொஸ் வீட்டில் காதல் குறித்து பேசமாட்டேன் என லொஸ்லியாவிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.
இருப்பினும் அந்த வாக்குறுதி நீர்மேல் எழுத்துப் போல் ஆனது. இந்நிலையில் இந்த வாக்குறுதியையும் தொடர்ந்து கடைப்பிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.