வாட்ஸ் ஆப் செயலியில் ஏராளமான ஸ்டிக்கர்கள் தரப்பட்டுள்ளன.
இவற்றுள் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்களும் அடங்கும்.
இங்கு தரப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை விடவும் நாம் சுயமாக தயாரித்து புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்தவும் முடியும்.
இதற்கு பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- கூகுள் பிளே ஸ்டோரிற்கு சென்று background eraser எனும் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
- பின்னர் ஸ்டிக்கராக பயன்படுத்தவுள்ள உங்கள் புகைப்படங்கள், செல்ஃபிக்கள் அல்லது வேறு படங்களை தரவிறக்கம் செய்து கைப்பேசியில் சேமிக்கவும்.
- background eraser அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி ஸ்டிக்கராக பயன்படுத்தவுள்ள படங்களின் பின்னணிகளை நீக்கிய பின்னர் சேமிக்கவும்.
- இவ்வாறு குறைந்தது 3 ஸ்டிக்கர்களை உருவாக்கவும். அல்லாவிடில் வாட்ஸ் ஆப் ஆனது குறைந்தளவு ஸ்டிக்கர்களுக்கு சப்போர்ட் ஆகாது.
- பின்னர் மீண்டும் பிளே ஸ்டோர் சென்று Personal App for WhatsApp எனும் செயலியை தரவிறக்கம் செய்து நிறுவவும்.
- இப்போது குறித்த அப்பிளிக்கேஷனை செயற்படுத்தியதும் நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்கள் தென்படும். அவற்றிற்கு அருகே உள்ள Add எனும் பொத்தானை அழுத்தவும்.
- மீண்டும் காட்சிப்படுத்தப்படும் செய்தியில் (Would you like to add Eraser to WhatsApp) Add பொத்தானை அழுத்தவும்.
- இப்போது வாட்ஸ் ஆப்பின் சட் விண்டோவை திறந்து ஸ்டிக்கர் பகுதிக்கு செல்லவும். அங்கே உங்களால் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் காண்பிக்கப்படும்.
அவற்றை நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.
ஸ்டிக்கரை உருவாக்குவதற்கான முழுமையான விளக்கம் இவ் வீடியோவில் தரப்பட்டுள்ளது.