இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையான வாட்ஸ் ஆப் ஆனது உலகளாவிய ரீதியில் பிரபல்யமாக விளங்குவதுடன் பல மில்லியன் கணக்கான பயனர்களையும் கொண்டுள்ளது.
அண்மையில் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் அபிளிக்கேஷில் புதிய ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடிய மற்றுமொரு செயலியான வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் இச் செயலி சில தினங்களிலேயே ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின்வரும் காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது காரணமாக இதேபோன்ற பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் ஏற்கணவே ஆப்ஸ் ஸ்டோரில் இக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்ததாக வாட்ஸ் ஆப் செயலி நிறுவப்பட்டிருந்தால் மாத்திரமே இதனை பயன்படுத்த முடியுமாக இருக்கின்றமையும், தனியாக நேரடியாக நிறுவ முடியாமல் இருக்கின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் செயலிகள் இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பினை கொண்டிருக்கின்றமை மூன்றாவது காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் காரணங்களை காட்டியோ ஆப் ஸ்டோரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதனால் நீக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.