வானில் வெடித்து சிதறிய ஏலியன்ஸ் விண்கலம்

227

ஸ்வீடன் நாட்டு வானில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று பயங்கர வெளிச்சமாக வந்து வெடித்து சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில், நீல நிறத்தில் பயங்கர வெளிச்சத்துடன் பூமியை நோக்கி வரும் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறுகிறது.

இதை உப்சாலா, Örebro மற்றும் தலைநகர் ஸ்டாக்ஹோம் முக்கிய நகரங்கள் உட்பட பல நகர மக்கள் கண்டு பீதியில் உறைந்துள்ளனர்.

பலர் சமூக வலைதளத்தில் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். இதில், ஒருவர் கூறியதாவது, இது ரஷ்யாவின் செயல் என கருதி பீதியடைந்தேன் என கூறியுள்ளார்.

மற்றொருவர், இது ஏலியன்ஸ் போன்ற அன்னிய சக்திகளின் செயல் என தெரிவித்துள்ளார்.

எனினும், இது குறித்து உப்சாலா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறையை சார்ந்த Eric Stempels விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, பூமியின் வளிமண்டலத்தில் தகர்ந்தது ஒரு விண்கற்கள். இது ஒரு ஆண்டில் சில முறை நடக்கும். அதிகபட்சம் பகலில் தான் நடக்கும், இரவில் நிகழ்ந்ததால் மக்கள் அனைவரும் இதை பார்த்து பீதியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

SHARE